மின்தடை செய்து பணப் பட்டுவாடா: தேர்தல் முடியும்வரை மின்வாரியத்தை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் - எச்.ராஜா கோரிக்கை

By செய்திப்பிரிவு

பாஜக தேசிய செயலாளரும், தியாகராய நகர் தொகுதி வேட் பாளருமான எச்.ராஜா சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

வாக்களிக்க பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக அறிமுகப்படுத்தியது. திமுகவின் இந்த திருமங்கலம் பார்முலாவை முன்னெடுத்துச் செல்வதில் இப்போது அதிமுக முதலிடத்தில் உள்ளது. ‘போடு வோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு’ என மக்களை உறுதி மொழி எடுக்கச் செய்து ஓட்டுக்கு பணம் வாங்குவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணப் பட்டுவாடாவை தொடங்கியுள்ளன.

சென்னையில் நேற்று (10-ம் தேதி) இரவு 10 முதல் 12 மணி வரை மின்தடையை ஏற்படுத்திவிட்டு வீடு, வீடாக ஆளுங்கட்சியினர் பணப் பட்டு வாடா செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மின்தடையை ஏற் படுத்தி பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் முடியும்வரை தமிழக மின்வாரியத்தை துணை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 82 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் குறைவாகும். திரா விட கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்தில் கல்வித் துறை சீரழிந்துள்ளது. இதனால், போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்