கட்சி நிர்வாக அமைப்பை 65 மாவட்டங்களாக பிரித்தது திமுக

By செய்திப்பிரிவு

திமுகவில் அமைப்பு ரீதியாக தற்போதிருக்கும் 34 மாவட்டங் களை 65 மாவட்டங்களாக உயர்த்தி திமுக தலைமை அறி வித்துள்ளது. புதிய மாவட்டங் களுக்கான பகுதிகளும் அறிவிக் கப்பட்டுள்ளது. திருவாரூர், கரூர், தர்மபுரி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் படுதோல்விக்கு உள் கட்சிப் பூசல் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, திமுகவில் அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர் பார்க்கப்பட்டது.

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குள் கட்சியை வலுப் படுத்தும் வகையில், மாவட்ட அளவில் செய்ய வேண் டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க, 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு இரு தினங்களுக்கு முன் 150 பக்க அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கி யது. அதில், தற்போதுள்ள மாவட்ட நிர்வாகங்களை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. அதன்படி, திமுகவில் தற்போதுள்ள 34 மாவட்ட நிர்வாகங்கள், 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்கள் மற்றும் அவற்றில் அடங்கும் சட்டசபைத் தொகுதிகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை வடக்கு (திருவொற்றி யூர், மாதவரம், பெரம்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம்), சென்னை கிழக்கு (துறைமுகம், எழும்பூர், சேப்பாக்கம் திரு வல்லிக்கேணி, கொளத்தூர், திரு.வி.க. நகர், அம்பத்தூர்), சென்னை மேற்கு (மதுரவாயல், வில்லிவாக்கம், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், தியாகராய நகர்), சென்னை தெற்கு (சைதாப்பேட்டை, விருகம் பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர்).

திருவள்ளூர் வடக்கு (கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருத்தணி), திருவள்ளூர் தெற்கு (திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி), காஞ்சி புரம் வடக்கு (திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல் பட்டு, திருப்போரூர்), காஞ்சிபுரம் தெற்கு (உத்திரமேரூர், காஞ்சி புரம், செய்யூர், மதுராந்தகம்) வேலூர் கிழக்கு (அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு) வேலூர் மத்தி (வேலூர், காட்பாடி, கீழ்வைத்தியனாங் குப்பம், அணைக்கட்டு, குடி யாத்தம்) வேலூர் மேற்கு (வாணி யம்பாடி, ஆம்பூர், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர்).

திருவண்ணாமலை வடக்கு (போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி), திருவண்ணாமலை தெற்கு (செங்கம், திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர், கலசப் பாக்கம்), விழுப்புரம் வடக்கு (செஞ்சி, மயிலம், திண்டிவனம்), விழுப்புரம் மத்தி (வானூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக் கோவிலூர்), விழுப்புரம் தெற்கு (உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தி யம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி).

கடலூர் வடக்கு (நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப் பாடி), கடலூர் தெற்கு (திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம் பரம், காட்டுமன்னார்கோவில்), தஞ்சை வடக்கு (திருவிடை மருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு), தஞ்சை தெற்கு (தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி), நாகை வடக்கு (சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார்), நாகை தெற்கு (நாகப் பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம்).

திருவாரூர் (மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம்), திருச்சி வடக்கு (லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்), திருச்சி தெற்கு (மணப்பாறை, திருவரங்கம். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர்), பெரம்பலூர் (பெரம்பலூர், குன்னம்), அரியலூர் (அரியலூர், ஜெயங்கொண்டம்), கரூர் (அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை).

புதுக்கோட்டை வடக்கு (கந்தர் வக்கோட்டை, புதுக்கோட்டை, விராலிமலை), புதுக்கோட்டை தெற்கு (திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி), சேலம் கிழக்கு (கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி), சேலம் மேற்கு (மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி), சேலம் மாநகர் (சேலம் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள்), நாமக்கல் கிழக்கு (ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல்), நாமக்கல் மேற்கு (பரமத்தி வேலூர், திருச்செங் கோடு, குமாரபாளையம்).

தருமபுரி (பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பி ரெட்டிபட்டி, அரூர்), கிருஷ்ணகிரி கிழக்கு (ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி), கிருஷ்ணகிரி மேற்கு (வேப்பனஹள்ளி, ஒசூர், தளி), கோவை வடக்கு (மேட்டு பாளையம், கவுண்டம்பாளையம் -மாநகர வட்டங்கள் தவிர, தொண் டாமுத்தூர்), கோவை தெற்கு (கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர்), கோவை மாநகர் வடக்கு (கவுண்டம் பாளையம் -மாநகர வட்டங்கள் மட்டும், கோவை வடக்கு), கோவை மாநகர் தெற்கு (கோவை தெற்கு, சிங்காநல்லூர்).

திருப்பூர் தெற்கு (தாராபுரம், காங்கயம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம்), திருப்பூர் வடக்கு (அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள்), ஈரோடு வடக்கு (பவானி, அந்தியூர், கோபிசெட்டி பாளையம், பவானிசாகர்), ஈரோடு தெற்கு (மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள்), நீலகிரி (உதகை, கூடலூர், குன்னூர்).

மதுரை வடக்கு (மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு), மதுரை தெற்கு (திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி), மதுரை மாநகர் வடக்கு (மதுரை வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கள்), மதுரை மாநகர் தெற்கு (மதுரை மத்தி மற்றும் மேற்கு தொகுதிகள்), திண்டுக்கல் கிழக்கு (ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல்), திண்டுக்கல் மேற்கு (பழநி, ஒட்டன்சத்திரம், வேட சந்தூர்), தேனி (ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம்).

ராமநாதபுரம் (பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர்), சிவகங்கை (காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை), விருது நகர் கிழக்கு (விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி), விருதுநகர் மேற்கு (சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர்), திருநெல்வேலி கிழக்கு (ஆலங் குளம், அம்பாசமுத்திரம், நாங்கு நேரி, ராதாபுரம்), திருநெல்வேலி மேற்கு (சங்கரன்கோவில், வாசு தேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி), திருநெல்வேலி மாநகர் (திருநெல்வேலி, பாளையங் கோட்டை).

தூத்துக்குடி வடக்கு (விளாத்தி குளம், ஒட்டப்பிடாரம், கோவில் பட்டி), தூத்துக்குடி தெற்கு (திருச்செந்தூர், திருவைகுண்டம், தூத்துக்குடி), கன்னியாகுமரி கிழக்கு (கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல்), கன்னியா குமரி மேற்கு (பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர்)

உட்கட்சித் தேர்தல் எப்போது?

புதிதாக அமையவிருக்கும் மாவட்ட எல்லைகளுக்குள் அடங்கியுள்ள ஒன்றிய மற்றும் நகரங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதன்பிறகு ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்