மாற்றுக் கூட்டணி மத்தியிலும் உருவாகும்: தா.பாண்டியன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து, உக்கடத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பேசியதாவது:

மத்தியில் இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில், மக்களுக்கு எதையும் செய்யாத பிரதமர் மோடி, தமிழகத்தை மீட்கப் போவதாக பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது. மாணவர்கள், முற்போக்காளர் கள் மீதான தாக்குதல், சிந்தனையாளர்கள் கொலை, சிறுபான்மையினருக்கு மிரட்டல் போன்ற சம்பவங்கள்தான் அதிகரித்துள்ளன.

திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா அணி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது முதல்படிதான். இதேபோன்ற மாற்றுக் கூட்டணியை மத்தியிலும் இடதுசாரிகள் உருவாக்குவார்கள். கேரளத்தில் இடது சாரிகள் ஆட்சியில் இருந்தபோதுதான், கோவை மாநகருக்கு சிறுவாணி தண்ணீர் கிடைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. பல மாநிலங்களில் தற்போது தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் வடமாநிலங்களில் இதுவரையில் 432 பேர் உயிர் இழந்துள்ளனர். தமிழக மும் இது போன்ற தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த பிரச்சினையை திமுக, அதிமுக கட்சிகளால் தீர்க்க முடியாது. தீர்க்கவும்மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

52 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்