அரசு மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,000 மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காகவும், பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வும் நாளை தொடங்கி 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், இந்த முறை 4,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்விற்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவ பணிகள் துறை சார்பில் உள்ள மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.

மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். கலந்தாய்விற்கு பிறகு காலியாக உள்ள மருத்துவர்களுக்கான பணியிடங்கள் சமன் செய்யப்படுவதோடு, புதிய காலிப் பணியிடங்கள் கண்டறியப்படும் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

12 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்