தடைக்காலம் முடிந்த முதல் நாளே அதிர்ச்சி: தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை கடலுக்கு சென்ற மீனவர்கள் 7 ராமேசுவரம் மீனவர்களையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தனர்.

தமிழகத்தில் கிழக்கு கடற்பரைக் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல்களில் மீன்களின் இனப்பபெருக்க காலமாக கணக்கிட்டு ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடித் தடைக்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கட்கிழமை அதிகாலையில் பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர்.

செவ்வாய்கிழமை கரை திரும்பிய ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ஒரு விசைப்படகிற்கு தலை 100-ல் இருந்து 150 கிலோ வரையிலும் இறால் மற்றும் மீன்கள் வீதம் 200 டன் வரையிலும் கொள்முதல் செய்யப்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

7 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சேசு இருதயம் என்பவரின் விசைப்படகில் தலைமன்னார் அருகே திங்கட்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகை கைப்பற்றில் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறை பிடித்து 7 பேரும், தலை மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு சொல்லப்பட்டுள்ளனர்.

45 நாட்கள் மீன்பிடி தடைக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினர் 7 மீனவர்களை சிறைப்பிடித்திருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்