'மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜு தான்' - அமைச்சர் தெங்கம் தென்னரசு

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜு தான் என்று அமைச்சர் தெங்கம் தென்னரசு பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, "மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் சுற்றுலமாக அறிவிக்கப்படுமா" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், "மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றுலா தலமாக அறிவிக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, "மதுரையில் எந்த பொழுது போக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். ஆனால் பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜு என்பது நாட்டிற்கே தெரிந்த விஷியம்" என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சால் திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 mins ago

விளையாட்டு

9 mins ago

கல்வி

56 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்