கோவை | கடையின் கதவை உடைத்து அரிசியைதின்ற காட்டு யானைகள்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை பெரியதடாகம் அனுவாவி மலைப் பகுதியில் இருந்து குட்டியுடன் கூடிய 7 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் வெளியேறியது. பின்னர், காப்புகாட்டில் இருந்து சுமார் 800 மீ தொலைவில் உள்ள பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயிலுக்குள் வந்த 2 யானைகள், கோயில் கதவுகளை தள்ளிவிட்டு, அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை இழுத்து உடைத்தன.

பின்னர், தடாகம் பிரிவு, அம்மன் நகர் பகுதியில் உள்ள பெட்டிக் கடையின் கதவுகளை உடைத்து, அங்கிருந்த அரிசியை தின்றன. அதைத்தொடர்ந்து அங்குள்ள தனியார் செங்கல் சூளை வழியாக வந்த யானை கூட்டம், வீட்டின் சுவரை இடித்து தள்ளின. தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதியை நோக்கி விரட்டினர். வனத்துறையினர் கூறும்போது, “சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் விண்ணப்பித்தபிறகு சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்