இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர் 19 பேர் விடுதலை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 19 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மார்ச் 29-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர், மார்ச் 31-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர், ஏப்ரல் 3-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இவர்கள் மீது எல்லை தாண்டிமீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

நீதிபதி கஜநிதிபாலன் தனது உத்தரவில், மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 19 பேரையும் விடுதலை செய்வதாகத் தெரிவித்தார்.

அதோடு சம்பந்தப்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் வரும் ஜூன் 14-ம் தேதிஉரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

25 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

27 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

58 mins ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்