தேமுதிக - ம.ந.கூட்டணியால் தமாகாவில் அதிருப்தி?

By செய்திப்பிரிவு

தேதிமுக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்துள்ளதால் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரணியன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி தொடங்கியது முதல் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், ஒற்றை இலக்கத் தொகுதிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என அதிமுக நிபந்தனை விதித்ததாகக் கூறப்பட்டது. இதனால் தமாகாவின் கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து தேமுதிக - ம.ந.கூட்டணியில் இணைந்து தமாகா 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது தமாகா மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனிடம் தொலைபேசியில் கேட்டபோது, ‘‘இன்றைக்கு எதுவும் கூற விரும்பவில்லை. ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது குறித்த எனது கருத்தை நாளை (இன்று) தெரிவிப்பேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்