மயிலாடுதுறை| ராட்சத குழாய்களை இறக்கும் ஓஎன்ஜிசி; தினகரன் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட வை. பட்டவர்த்தி கிராமத்தில் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனத்தின் செயல் கண்டத்துக்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிக்குட்பட்ட மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வை. பட்டவர்த்தி கிராமத்தில் ONGC நிறுவனம் திடீரென ராட்சத குழாய்களை கொண்டுவந்து இறக்கிவருவது கண்டனத்திற்குரியது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு நடுவே இதற்கான கிடங்கினை அமைத்திருக்கிறார்கள்.

ONGC நிறுவனத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் கிராம மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை புதிதாக தொடங்குவதற்கு தமிழக அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

மயிலாடுதுறை வை.பட்டவர்த்தியில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 secs ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்