சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலி: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் வேனில் இருந்து குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம்போல், பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர் . வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி வந்துள்ளார்.

அப்போது, வேனை பார்க்கிங் செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, மாணவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் பள்ளி வேனிலிருந்து குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல் ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பணிநேரத்தில் அஜாக்கிரதையாக இருந்த பள்ளி வேனிலிருந்து குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தியை கைது செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை: மாணவன் பலியான ஆழ்வார்திருநகர் தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் விசாரணை நடத்தினார். மாணவன் உயிரிழப்பு சம்பவம் குறித்து இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்