ஏப்ரல் 16-ம் தேதி நடக்கிறது சென்னை தீவுத்திடலில் ஏழுமலையான் திருக்கல்யாணம்

By என்.மகேஷ்குமார்

திருமலை: சென்னை தீவுத்திடலில் வரும் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பரின் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் வெகு பிரம்மாண்டமான முறையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

இதனையொட்டி, நேற்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி, தமிழக தேவஸ்தான கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி, அறங் காவலர் குழு உறுப்பினர் டாக்டர். சங்கர் உட்பட தேவஸ்தான உயர் அதிகாரிகள் குழு தீவுத்திடலில் ஆய்வு செய்தது.

மேலும், சென்னை ஜி.என். செட்டி தெருவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயில் பணிகளையும் இக்குழு ஆய்வு செய்தது.

அதன் பின்னர், இது தொடர்பாக அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிவாசர் திருக்கல்யாணம், வரும் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி சென்னை தீவுத்திடலில் வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த வாரம் தலைமை செயலாளர், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர், போலீஸ் துறை, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

பரந்த மேடையில் சுவாமி திருக்கல்யாணம் வெகு வைபோகமாக நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது. இதில் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க் கப்படுகிறது.

இவ்வாறு தர்மா ரெட்டி கூறி னார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்