அதிமுக, திமுகவுக்கு ஓய்வளிக்க வேண்டும்: பிரேமலதா

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவினரை தோல்வியடைய செய்து, அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா வலியுறுத்தினார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி தொகுதி தேமுதிக வேட் பாளர்கள் மற்றும் பெரியகுளம் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, தேனி, போடியில் பிரேமலதா நேற்று தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டார்.

தேனியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது கூட்டணி என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது முதலாவது கூட்டணியாக உள்ளது. விவசாயம், நெசவுத் தொழில் தமிழகத்தின் இரண்டு கண்கள், இவை என்றைக்கு முன்னேற்றம் அடைகிறதோ? அன்று தமிழகம் முன்னேறும்.

எம்ஜிஆர் ஆட்சிக்கு பின்னர் அதிமுக, திமுக விஷச் செடிகளாக உள்ளன. இரு கட்சியினரையும் தோல்வி அடையச் செய்து ஓய்வு அளிக்க வேண்டும். தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்படும். அணைகள், கண்மாய்கள், குளம், ஏரிகள் தூர் வாரப்பட்டு அதிக நீர் தேக்கப்படும். அதிமுக, திமுக அரசுகளின் தொலைநோக்கு பார்வையில்லாததால் விவசாயிகள் பலர் தங்களது நிலங்களை விற்றுவிட்டு வெளி மாவட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்கச் சென்று விட்டனர். மக்களுக்கு அதிமுக, திமுக எதுவும் செய்யவில்லை, அப்புறம் ஏன், அவர்களுக்கு ஓட்டு போடுகிறீர்கள். 110 விதி வெறும் அறிவிப்பாக உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்