3 பேர் கொலை வழக்கில் 15 பேருக்கு ஆயுள்: 18 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

பென்னாகரத்தில் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த 3 பேர் கொலை வழக்கில், 15 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த வர் மாரிமுத்து (45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் வட்டச் செயலாள ராக இருந்தார். மாரிமுத்து மற்றும் அவரது சகோதரர்கள் விஸ்வநாதன் (42), மணி (40) ஆகிய 3 பேர் கடந்த 24.01.1998 அன்று மல்லாபுரம் அருகே துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் உறவினரான மாதப்பன் என்பவர் யுசிபிஐ கட்சி பிரமுகர். அவர் மற்றும் அவரது மகன்களான துரை, சுப்பு தரப்பினருக்கும் மாரிமுத்து தரப்பினருக்கும் இடையே நில விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. மேலும், இரு தரப்புக்கும் இடையே அரசியல் செயல்பாடு தொடர்பாகவும் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று நடந்த தகராறின்போது 3 பேர் கொலை செய் யப்பட்டனர். இதுதொடர்பாக 32 பேர் மீது பென்னாகரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. வழக்கு காலத்தில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் வழக்குக்கு தொடர்பில்லாதவர் என இடையிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார்.

28 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடந் தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக்குமார் ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாதப்பன் (50), கிருஷ்ணமூர்த்தி (44), சின்னகணக்கன் (86), முத்து (47), அண் ணாதுரை (39), செந்தில் (35), இளமதிராஜா (38), சுப்பு (50), செந்தில்குமார் (44), ரவி (50), பழனி (44), காட்டுராஜா (52), சேட்டு (45), சின்னசாமி (62), மாதப்பன் (45) ஆகிய 15 பேருக்கு நீதிபதி லதா ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 15 பேரும் தலா ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும், தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞரான கலைச்செல்வன், துரை, கமலா, லட்சுமி, ரவி, பொன்னம்மாள், மஞ்சுளா, கோவிந்தம்மாள் உள்ளிட்ட 13 பேர் விடுவிக்கப்பட்டனர். தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் ஒரே வழக்கில் 15 பேருக்கு ஆயுள் வழங்கப்பட்ட முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்