அதிக மது கொள்முதலுக்கு திமுக லஞ்சம்: இதுதான் மது எதிர்ப்பு கொள்கையா?- பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்களும் மது விலக்கை நடைமுறைப்படுத்துவோம் என 6-வது முறையாக திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அதே சமயம் அக்கட்சியைச் சேர்ந்த மது ஆலை அதிபர்கள் அதிமுக அமைச்சருடன் கூட்டணி அமைத்து கூடுதல் லஞ்சம் கொடுத்து தங்கள் தயாரிப்புகளை அதிகளவில் வாங்க வைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 11 மது ஆலைகளும், 7 பீர் ஆலைகளும் உள்ளன. டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவகைகள் இந்த ஆலைகளில் இருந்துதான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு சொந்த மானவை. கடந்த 2015-16-ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளில் 56 சதவீதமும், பீர் வகைகளில் 81 சதவீதமும் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

திமுக ஆதரவு நிறுவனங் களில் இருந்து அதிகளவில் மது கொள்முதல் செய்யப்பட்டி ருப்பதற்கான காரணமும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டாஸ்மாக் நிறுவனத் துக்கு மது கொள்முதல் செய்யப்படும் போது ஒரு பெட்டி மதுவுக்கு ரூ.50-ம், பீருக்கு ரூ.30-ம் லஞ்சமாக வாங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் அமைச்சருக்கு வழங்குவதற்காக ஒரு பெட்டிக்கு கூடுதலாக ரூ.15 வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதை திமுக ஆதரவு ஆலை அதிபர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டதால் அவர்களிடமிருந்து கூடுதலாக மது, பீர் வகைகளை கொள்முதல் செய்ய துறை மேலிடம் ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகள வில் மது கொள்முதல் செய்வதற்காக திமுக மது ஆலை அதிபர்கள் ஆயிரத்து 291 கோடி ரூபாயை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளனர். இதன் மூலம், அவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் திமுக மது ஆலைகள் உற்பத்தி செய்த மதுவின் மூலம் மட்டும் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைமை, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போகிறதாம். திமுகவின் சொல்லுக்கும், செயலுக் கும் எவ்வளவு முரண்பாடு?

இவ்வாறு ராமதாஸ் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்