புதிய தமிழகத்துக்கு தொலைக்காட்சி பெட்டி: சொந்த சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகள்

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், மமக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளன.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

திமுக அணியில் ஒட்டப் பிடாரம், வாசுதேவநல்லூர், கிருஷ் ணராயபுரம், வில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக் காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த சின்னத்தில்தான் 4 தொகுதிகளிலும் போட்டியிடு வோம். போட்டியிட விரும்புவர் களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 14-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

இதேபோல, திமுக அணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் சொந்த சின்னத்திலேயே போட்டியிட உள் ளன. இதுபற்றி மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘கடந்த தேர்தலில் இரட்டை மெழுகு வர்த்தி சின்னத்தில் மமக போட்டி யிட்டது. அந்தச் சின்னம் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. விரைவிலேயே எங்க ளுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும். அந்த சின்னத்தில்தான் போட்டி யிடுவோம்’’ என்றார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறும்போது, ‘‘இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சின்னம் ஏணி. அந்த சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்