சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து தி.மலைக்கு 900 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 50 ஆயிரம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண் ணாமலைக்கு நேற்று 900 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன. திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபத் திருவிழா போலவே, சித்ரா பவுர்ணமியின் போதும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலை யாரை வழிபடுவார்கள். நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால், திருவண்ணாமலையில் ஏராளமா னோர் கிரிவலம் சென்றனர்.

பக்தர்களின் வசதிக்காக பல் வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார் பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன. சென்னையில் கோயம் பேடு பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டும் நேற்று 900 சிறப்பு பேருந் துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு போக்கு வரத்து கழகங்களின் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலை யங்களில் காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. கூட்டத்துக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 900 சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இதே அளவில் 22-ம் தேதி (இன்று) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்