பாமகவின் முதற்கட்ட பட்டியலில் 45 வேட்பாளர்கள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது.

நிறுவனர் ராமதாஸ், முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது ஒப்புதலுடன் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

1. ஆலங்குடி (புதுக்கோட்டை) - டாக்டர் சு. அருள்மணி



2. பொன்னேரி(தனி) (திருவள்ளூர்) - தி. அ. பாண்டியன்



3. செங்கல்பட்டு (காஞ்சிபுரம்) - கே. ஆறுமுகம்



4. திருவள்ளூர் (திருவள்ளூர்) - வ. பாலயோகி



5. திருப்பூர் தெற்கு (திருப்பூர்) - தி. சை. மன்சூர்



6. ஆலந்தூர் (காஞ்சிபுரம்) - இரா. சீனிவாசன்



7. ஜோலார்பேட்டை (வேலூர்) - கோ. பொன்னுசாமி



8. திருச்சி கிழக்கு (திருச்சி) - பா. ஸ்ரீதர்



9. மணச்சநல்லூர் (திருச்சி) - மா.பிரின்ஸ்



10. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (சென்னை) - ஏ. வி. ஏ. கசாலி



11. தியாகராய நகர் (சென்னை) - வி. வினோத்



12. திரு.வி.க.நகர்(தனி) (சென்னை) - தே. வனிதாமணி



13. ஓமலூர் (சேலம்) - அ. தமிழரசு



14. சேலம் மேற்கு (சேலம்) - இரா. அருள்



15. ஸ்ரீரங்கம் (திருச்சி) - சு.உமாமகேஸ்வரி



16. மதுராந்தகம்(தனி) (காஞ்சிபுரம்) - எ. ஆதிகேசவன்



17. பூந்தமல்லி(தனி) (திருவள்ளூர்) - சி. பார்த்தசாரதி



18. திருவிடைமருதூர்(தனி) (தஞ்சாவூர்) - எஸ். ஆர். மாதையன்



19. அரவக்குறிச்சி (கரூர்) - ம. பாஸ்கரன்



20. மன்னார்குடி (திருவாரூர்) - சு. பாலசுப்பிரமணியன்



21. பெரம்பலூர்(தனி) (பெரம்பலூர்) - மு. சத்தியசீலன்



22. செங்கம்(தனி) (திருவண்ணாமலை) - சி. முருகன்



23. ஓசூர் (கிருஷ்ணகிரி) - ப.முனிராஜ்



24. உதகமண்டலம் (நீலகிரி) - மு. பால்ராஜ்



25. மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) - கு. மூர்த்தி



26. கவுண்டம்பாளையம் (கோயம்புத்தூர்) - ஆ. தங்கவேல் பாண்டியன்



27. மொடக்குறிச்சி (ஈரோடு) - செ. நாச்சிமுத்து



28. சேந்தமங்கலம் (தனி) (நாமக்கல்) - செ. சுசிலா



29. லால்குடி (திருச்சி) - இரா. உமாமகேஸ்வரன்



30. பரமக்குடி(தனி) (இராமநாதபுரம்) - இரா. தங்கராஜ்



31. திருப்பத்தூர் (சிவகங்கை) - பழ. அழகப்பன்



32. மதுரை மத்தி (மதுரை) - பி. செல்வம்



33. மதுரை மேற்கு (மதுரை) - பா. கிருஷ்ணகுமார்



34. கம்பம் (தேனி) - பொன். காட்சிக்கண்ணன்



35. பெரியகுளம்(தனி) (தேனி) - இரா. வைகைக்கண்ணன்



36. திண்டுக்கல் (திண்டுக்கல்) - இரா. பரசுராமன்



37. வேடச்சந்தூர் (திண்டுக்கல்) - கே. சி. பழனிச்சாமி



38. விருதுநகர் (விருதுநகர்) - பொ. கணேசபெருமாள்



39. அருப்புக்கோட்டை (விருதுநகர்) - தீ. அரவிந்த்குமார்



40. திருச்செந்தூர் (தூத்துக்குடி) - த. உஜ்ஜல்சிங்



41. கோவில்பட்டி (தூத்துக்குடி) - ஜி. இராமச்சந்திரன்



42. கடையநல்லூர் (திருநெல்வேலி) - திருமலைக்குமாரசாமி



43. நாங்குநேரி (திருநெல்வேலி) - சா. திருப்பதி



44. திருநெல்வேலி (திருநெல்வேலி) - கணேசன். கண்ணன்



45. கன்னியாகுமரி (கன்னியாகுமரி) - எஸ். ஹில்மன் புரூஸ் எட்வின்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

வலைஞர் பக்கம்

54 mins ago

கல்வி

47 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

57 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்