முஸ்லிம், தலித்களுக்கு சீட் தராவிட்டால் காங்கிரஸில் இருந்து விலகுவேன்: இதயதுல்லா ஆவேசம்

By செய்திப்பிரிவு

முஸ்லிம்கள், தலித்களுக்கு சீட் வழங்காவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதய துல்லா தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ச்சியாக வாக்க ளிக்கும் சிறுபான்மையினர், தலித் களுக்கு அவர்களது மக்கள் தொகை சதவீதப்படி சீட் வழங்குவதில்லை. அதேநேரத் தில் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டவர்கள், கட்சிக்காக துரும்பைக்கூட கிள்ளிப்போடாத பணக்காரர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால் தமிழ கத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். இதுவரை அறிவிக்கப்பட்ட 31 வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். திருச்சி கிழக்கு, நன்னிலம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் கணிசமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆனால் அங்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 45 ஆண்டுகள் கட்சியில் இருந்து உழைக்கும் எனக்கும் தொகுதி வழங்கவில்லை. இனிமேலும் இந்த கட்சியில் இருந்து எனது உழைப்பை வீணடிக்க விரும் பவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் தலை வர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனது கடி தத்தை மதித்து மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு முஸ்லிம்கள், தலித்களுக்கு வாய்ப்பு கொடுத் தால் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றுவேன். எந்தக் கட்சியிலும் இப்போது இணைய மாட்டேன். தேர்தலுக்குப் பின்னர் அதுகுறித்து முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

45 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்