தேர்தல் தோல்வி எதிரொலி: திமுக ஒழுங்கு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திமுக-விலிருந்து 3 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 33 பேரில் 6 நகரச் செயலாளர்கலும் 21 ஒன்றியச் செயலாளர்களும் அடங்குவர். நாடாளுமன்ற உறுப்பினரான கே.பி.ராமலிங்கம் திமுக-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்

தேர்தலின் போது கட்சி விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழனி மாணிக்கம், தருமபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் முல்லை வேந்தன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீக்கப்பட்ட 33 பேரும் ஏன் கட்சியிலிருந்து முழுதுமாக நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒருவார காலத்திற்குள் அவர்கள் விளக்கம் தரத் தவறுவார்களேயானால் அவர்களிடம் விளக்கமளிக்க ஆதாரம் ஏதுமில்லை என்று கருதப்பட்டு நேரடியாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கழகத்திலிருந்து முழுதும் நீக்கப்படுவார்கள் என்று தலைமைக் கழக அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைக்குரியவர்கள் பட்டியல் வருமாறு:

1. திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சை மாவட்டம்.

2. திரு. வ. முல்லைவேந்தன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி தெற்கு மாவட்டம்.

3. திரு. பெ. இன்பசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி வடக்கு மாவட்டம்.

4. திரு. சிட்டி முருகேசன், நகரக் கழகப் பொறுப்பாளர், தர்மபுரி

5. திரு. சுந்தரம், நகரக் கழகச் செயலாளர், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம்.

6. திரு. தென்றல் செல்வராஜ், நகரக் கழகச் செயலாளர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.

7. திரு. மகாராஜன், நகரக் கழகச் செயலாளர், துறையூர், திருச்சி மாவட்டம்.

8. திரு. சீனி அண்ணாதுரை, நகரக் கழகச் செயலாளர், பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

9. திரு. இராஜ பூபாலன், நகரக் கழகச் செயலாளர், மன்னார்குடி

10. முத்துக்குமாரசாமி, பேரூர் கழகச் செயலாளர், நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.

11. திரு. ரவிச்சந்திரன், நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர்,

12. திரு. பாப்பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்,.

13. திரு. ஓமலுhர் பரமன், ஓமலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர்

14. திரு. கே. பொன்னுச்சாமி, மொரப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

15. திரு. ஆர். காசிவிசுவநாதன் மேச்சேரி ஒன்றியக் கழகச் செயலாளர்.

16. திரு. க. கார்த்திகேயன், தியாகதுர்க்கம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

17. திரு. தீ. சக்திவேல், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

18. திரு. பி. கணேசன், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர்.

19. திரு. டி.பி. சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

20. திரு. இராஜமாணிக்கம், குடிமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளர்.

21. திரு. கோழிக்கடை கணேசன், வால்பாறை ஒன்றியக் கழகச் செயலாளர்.

22. திரு. ஆனந்தன், மண்ணச்சநல்லுhர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

23. திரு. சோழன், முசிறி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

24. திரு. ஜெயபால், கடலுhர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

25. திரு. ஏனாதி பாலு, பட்டுக்கோட்டை ஒன்றியக் கழகச் செயலாளர்.

26. திரு. தியாக இளங்கோ, ஒரத்தநாடு ஒன்றியக் கழகச் செயலாளர்.

27. திரு. மாரியப்பன், பழனி ஒன்றியக் கழகச் செயலாளர்.

28. திரு. ஓ. ராஜேந்திரன், வத்தலக்குண்டு ஒன்றியக் கழகச் செயலாளர்.

29. திரு. சின்ராஜ், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்.

30. திரு. இராஜசேகர், கடலாடி ஒன்றியக் கழகச் செயலாளர்.

31. திரு. கனகு (எ) கனகராஜ், மண்டபம் ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்.

32. திரு. கே.பி. இராமலிங்கம், எம்.பி., மாநில விவசாய அணிச் செயலாளர்.

33. திரு. எஸ்.எம். போஸ், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், விருதுநகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்