புதிய தமிழகம் போட்டியிடும் 4 தொகுதிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக இன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''திமுக அணியில் புதிய தமிழகம் கட்சி ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

நாங்கள் விரும்பிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கு நூறு மனநிறைவாக இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கும், எனக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. போட்டியிடும் சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து நாளை முடிவு செய்யப்படும்''என்றார்.

திமுக அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து புதிய தமிழகம் கட்சிக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். இதில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், கிருஷ்ணசாமியும் கையெழுத்திட்டனர். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

43 mins ago

விளையாட்டு

49 mins ago

வலைஞர் பக்கம்

2 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்