பொறியியல் படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: 271 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் - 23-ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 271 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள் ளனர். வரும் 23-ம் தேதி கவுன் சலிங் தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 570 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல் லூரிகளில் சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் அண்ணா பல் கலைக்கழகத்தின் பொது கலந் தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் கடந்த 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

சென்னை மாணவர் முதலிடம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தரவரிசைப் பட்டியலையும் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலையும் வெளியிட்டார்.

சென்னை மாணவர்கள் கே.சுந்தர் நடேஷ் முதலிடத்தையும், எஸ்.அபிஷேக் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஈரோடு வி.எஸ்.விஜயராம், நாமக்கல் எம்.மிதுன், திண்டுக்கல் ஆர்.பி.ஹரீதா, திருப்பூர் எம்.பிரபு, கோவை எஸ்.ரவிசங்கர், ஈரோடு என்.விஷ்ணுபிரியா, நாமக்கல் கே.ஆர்.மைதிலி, வாணியம்பாடி எஸ்.ராமு ஆகியோர் முறையே 3 முதல் 10-ம் இடம் வரை பெற் றுள்ளனர்.

தொழிற்கல்வி பிரிவில் சேலம் கே.ஆனந்த் முதலிடத் தையும், கோவை ஜெ.மெல்பா 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, கூடுதல் செயலாளர் ஜெ.உமா மகேஸ்வரி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

5,264 விண்ணப்பம் நிராகரிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறும்போது, “பொறியியல் படிப் புக்கு விண்ணப்பித்தவர்களில் 1,68,423 பேரின் விண்ணப்பங் கள் ஏற்கப்பட்டன. சில குறைபாடு களால் 5,264 விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மாணவர்கள் குறைபாடுகளை சரிசெய்தால் அவர்களின் பெயரும் தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றார்.

மாணவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செயலா ளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறுகையில், ‘‘ஒரே கட் ஆப் மதிப் பெண் வந்ததால் முதலில் கணித மதிப்பெண்ணுக்கு முக்கியத் துவம், பின்னர் இயற்பியல், 4-வது விருப்பப் பாடம், பிறந்த தேதி, ரேண்டம் எண் மதிப்பெண் ஆகியவற்றுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 271 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர் (கடந்த ஆண்டு 11 பேர்). தரவரிசை பட்டியல் தயாரித்தபோது 124 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்த வேண்டியதிருந்தது’’ என்றார்.

இணையதளத்தில் பார்க்கலாம்

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்த மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் (www.annauniv.edu) குறிப்பிட்டு தங் களின் தரவரிசையையும் கவுன் சலிங் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்புக்கான கவுன் சலிங், வரும் 23-ம் தேதி தொடங்கு கிறது. 23, 24-ம் தேதிகளில் விளையாட்டுப் பிரிவினருக்கும் 25-ம் தேதி மாற்றுத் திறனாளி களுக்கும் கவுன்சலிங் நடக்கும். பொதுவான கவுன்சலிங் ஜூன் 27-ல் தொடங்கி, ஜூலை 28-ம் தேதி நிறைவடைகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறுகையில், “ஒரு மாதத்துக்கு மேல் கவுன்சலிங் நடக்க உள்ளது. தினமும் 5 ஆயிரம் பேர் அழைக்கப்படுவர். முதல்நாளில் மட்டும் 3 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். கவுன்சலிங்குக்கான அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. கவுன்சலிங் நாள், நேரம் ஆகிய விவரங்களை மாணவர்கள் இணையதளத்திலேயே தெரிந்துகொள்ளலாம். எனினும் கவுன்சலிங் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

விளையாட்டு

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்