உடையார்பாளையம் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக

By பெ.பாரதி

அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உடையார்பாளையம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (பிப் 22) காலை அரியலூர் நகராட்சி அலுவலக மேல்தளத்தில் 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 1 மணி வரை நடைபெற்ற 9 சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக 7 வார்டுகளையும், அதிமுக 7வார்டுகளையும், சுயேச்சை 4வார்டுகளையும் கைப்பற்றிய நிலையில், அரியலூர் நகராட்சியை சுயேச்சை வேட்பாளர்களுடன் கைப்பற்றியுள்ளது.

இதில் சுயேச்சை வெற்றி பெற்றவர்களில் 4 பேரில் 3 பேர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 வார்டுகளை திமுகவும், தலா 1 வார்டுகளை அதிமுக, பாமக,பாஜக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. 3 வார்டுகளை சுயேட்சைகளும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக உடையார்பாளையம் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

மேலும்