ஓட்டுக்காக பணம் கொடுப்பதை கண்காணிக்கிறீர்களா? - கோவை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ’ஓட்டுக்காக பணம் கொடுப்பதைக் கண்காணிக்கிறீர்களா?’ என கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், ’தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கோவை மாநகராட்சியில், ஓட்டுக்கு பணம் பெறுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் அளித்த அந்த மனு தொடர்பாக இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல், அலைக்கழிக்கப்படுகிறேன். எனவே எனது மனுவை பரிசீலிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பணம் கொடுத்து வாக்குகள் பெறுவது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும், அதை கண்காணிக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினர். தற்போது பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மனுதாரரின் கோரிக்கை மனுவை இரண்டு நாட்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

25 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

33 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

18 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்