குடியாத்தம் தனித் தொகுதியில் அதிமுக போட்டி?- நிர்வாகிகள் நேர்காணலுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

குடியாத்தம் தனித் தொகுதி நேர்காணலுக்கு 3 அதிமுக நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, குடியாத்தம் தொகுதியில் அதிமுக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு கோரப்பட்டது.

அதன்படி, 300-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். அதன்படி, கடந்த மாதம் 11 தொகுதிகளுக்கு 3 பேர் வீதம் 33 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணல் பட்டியலில் இடம்பெறாத குடியாத்தம் (தனி) தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அதேபோல, சோளிங்கர் தொகுதியைக் கூட்டணியில் இணைய உள்ள தமாகாவுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

குடியாத்தம் (தனி) தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டியிட அதிமுக முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, பேரணாம்பட்டு தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செ.கு.தமிழரசன், மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்ற புகார் இருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பில் குடியாத்தம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பேரணாம்பட்டு இருப்பதால் அப்பகுதி அதிமுகவினரும் செ.கு.தமிழரசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சோளிங்கர் தொகுதிக்காக அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் பார்த்தீபன் உள்ளிட்ட 3 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதனால், கூட்டணியில் தமாகா இடம் பெறுமா? என்ற கேள்வி ஏற்பட்டது.

இந்நிலையில், குடியாத்தம் (தனி) தொகுதிக்காக ஜெயந்தி பத்மநாபன், வழக்கறிஞர் கோவிந்தசாமி, கஸ்பா மூர்த்தி ஆகியோர் இன்று நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதல் இருவர் அமைச்சர் வீரமணியின் ஆதரவாளர்கள் என்றும் கஸ்பா மூர்த்தி மட்டும் குடியாத்தம் நகரச் செயலாளர் ஜே.கே.என்.பழனியின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக குடியாத்தம் தனித் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சிக்குள் இருந்த பிரச்சினை களை சமாளிக்க நேர்காணல் நடத்தப்படுகிறதா? அல்லது இந்திய குடியரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செ.கு.தமிழரசன் வேறு தொகுதிக்கு இடம் மாறுகிறாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்