தேர்தல் ஆணையம் மீது இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட் டத்தில், அக்கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:

மக்களின் வறுமையைப் பயன் படுத்தி, அதிமுக மற்றும் திமுகவினர் ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை பணப் பட்டுவாடா செய்கின்றனர். இதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல், அவர்களுக்குத் துணை போகிறது.

தற்போதைய தேர்தல், கொள்கை கூட்டணிக்கும், கொள்ளைக் கூட்டத் துக்கும் நடக்கும் போராகும். ஊழல் கட்சிகளை அகற்றி, லஞ்சம் இல்லாத புதிய அரசை உருவாக்குவதும், வெளிப்படையான நிர்வாகம் அமைப்பதுமே எங்கள் நோக்கம்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு, வீதியில் நின்ற மக்களை நேரில் சந்திக்காமல், வாட்ஸ்அப்பில் ஆறு தல் கூறிய ஜெயலலிதா, தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக வீதிக்கு வந்து வாக்கு சேகரிக்கிறார். திருவாரூர் தொகுதியில் வென்ற கருணாநிதி, தொகுதிக்கே வந்தது கிடையாது. மீண்டும் தேர்தலுக்காக தொகுதிக்கு வருகிறார். மக்களை வாக்குகளாக மட்டுமே பார்க்கும் இவர்களைத் தண்டிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களை தடுத்து நிறுத்துவோம். தேமுதிக- தமாகா- மக்கள் நலக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்