ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றக் கோரி காங். அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ போராட்டம்

By செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்பதூர் தொகுதி வேட் பாளராக அறிவிக்கப்பட்ட செல்வப் பெருந்தகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் எம்எல்ஏ யசோதா சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு முன்னாள் எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை உறுப் பினருமான யசோதா விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட் பாளராக கட்சியின் மாநில எஸ்சி பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், யசோதா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வப்பெருந்தகை ஆதரவாளர் களும் கோஷமிட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். ஆத்திரமடைந்த செல்வப் பெருந்தகை ஆதரவாளர்கள், யசோதா ஆதரவாளரை தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பின் யசோதா தனது ஆதர வாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக நிருபர்களிடம் யசோதா கூறும்போது, ‘‘ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தருவதாக இளங்கோவன் தெரிவித்திருந்தார். ஆனால், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு கொடுக் கப்பட்டுள்ளது. அவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டால், ராஜீவ் காந்தி ஆன்மா மன்னிக்காது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்