மாரத்தானில் பங்கேற்றதால் கூப்பிட்டதும் ஓடோடி வருவேன்: அன்புமணி

By செய்திப்பிரிவு

கடலூரில் நேற்று நடைபெற்ற பாமக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, ‘எதிர்வரும் தேர்தல் ஆழ்கடலுக்கும், சாத்தானுக்கும், மருத்துவருக்கும் இடையேயான போட்டி. நீங்கள் இந்தத் தேர்தலில் மருத்துவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றால் முதல் கையெழுத்து மதுவிலக்குக்கு என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக செய்யாததை 5 ஆண்டுகளில் அன்புமணியாகிய நான் நிறேவேற்றுவேன்.

அயல்நாடுகளில் தேர்தல் என்றால், தேர்தலில் போட்டியிடும் நபரின் உடல் தகுதியைதான் முதலில் கவனிப்பார்கள். ஏனெனில் அவர் உடல் தகுதியோடு இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். ஆனால், தற்போது தமிழகத்தின் நிலை எப்படி என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் 10 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவன். நீங்கள் கூப்பிடும்போது ஓடோடி வருவேன். முதலமைச்சர் வேட்பாளருக்கு உடல் தகுதி முதன்மையானது என்பதை அறிந்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்