7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

கடந்த கல்வியாண்டைப் பொருத்தவரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்தன. இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் 2,135 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் கலந்தாய்வின் முதல் நாளான இன்று, 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 113 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 84 பேருக்கும் பி.டி.எஸ்., இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள்,635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.இந்தப் படிப்புகளுக்கு 2021–22-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 24 ஆயிரத்து 949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 913 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 1,806 பேர் இடம்பெற்றுள்ளனர்.

விடுபட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு: உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடம்பெறாத மாணவர்கள் இன்று காலை 8 மணிக்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 71 எம்பிபிஎஸ் இடங்கள், 2 பிடிஎஸ் இடங்கள் என 73 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. வரும் 30-ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் நடைபெறும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்