திருப்பூர் - அவிநாசி சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது; காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் அம்மாபாளையத்தில் பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சோளத்தட்டு காட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது.

இந்நிலையில், சிறுத்தை பதுங்கி இருப்பதாக கூறப்படும் இடத்தில் பாதுகாவலர் நிறுவனத்திற்குள் சென்றபோது அவரை தாக்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுத்தை தாக்கியதில் காயம் ஏற்பட்ட, பாதுகாவலர் ராஜேந்திரன் என்பவருக்கு தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் அவிநாசி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுத்தையால் தாக்குதலுக்கு உள்ளான பாதுகாவலர்

இதனை தொடர்ந்து, அம்மாபாளையம் பகுதியைச் சுற்றிலும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சோளத்தட்டு காட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை மயக்கம் ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்