தேமுதிக தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம்: பிரேமலதா விஜயகாந்த் மீது கூட்டணி கட்சியினர் அதிருப்தி

By எம்.மணிகண்டன்

தேமுதிக வேட்பாளர்களுக்கு மட்டும் பிரச்சாரம் செய்து வருவதால் பிரேமலதா விஜயகாந்த் மீது கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி தமாகா அணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மகளிரணித் தலைவர் பிரேமலதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். விஜயகாந்த் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்து 2-ம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரேமலதா தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை மணப் பாறையில் நேற்று தொடங்கினார்.

அவரது 2-ம் கட்ட பிரச்சாரப் பயணத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயி லாடுதுறை, சீர்காழி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி என தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளுக்கு மிக அருகில் கூட்டணி கட்சிகளின் தொகுதிகளைக்கூட அவர் புறக்கணிப்பதாக ம.ந.கூட் டணி மற்றும் தமாகா நிர்வாகிகள் கூறுகின்றனர். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே பிரேமலதா பிரச்சாரம் மேற் கொண்டுள்ளதால், மற்ற கூட்டணிக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ள தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘பிரேமலதாவின் 2-ம் கட்ட பிரச்சாரத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 2, 3 இடங்களில் பேச வேண்டியுள்ளது. அதனால் தேமுதிக தொகுதிகளில் இப்போது பிரச்சாரம் செய்து வருகிறார். அடுத்தகட்ட பிரச்சாரங்களில் அவர் ம.ந.கூட்டணி, தமாகா வேட் பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வார். அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி கட்சி தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்