பெண் கல்வியை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து குமரிக்கு 10 வயது சிறுமி சைக்கிள் பயணம்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஸ் படேல். டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்கிறார். இவரது மகள் ஜெய்பாரி சாயிபடேல் (10). 5-ம் வகுப்பு மாணவி. பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பிரச்சார விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

காஷ்மீரில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி சைக்கிளில் பயணத்தைத் தொடங்கிய சிறுமி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக சுமார் 3,600 கி.மீ. பயணம் மேற்கொண்டு தமிழகம் வந்துள்ளார். நேற்று காலை அவர் விருதுநகர் வந்தார். அப்போது, அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வரும் 21-ம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக சிறுமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்