நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன. 6 முதல் 45-வது சென்னை புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்

By செய்திப்பிரிவு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 45-வது சென்னை புத்தகக் காட்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் 45-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 முதல் 23-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

பபாசி தலைவர் எஸ்.வயிரவன், செயலர் எஸ்.கே.முருகன், பொருளாளர் குமரன், துணைத் தலைவர் மயில்வேலன், இணைச் செயலர் எஸ்.பழனி, துணை இணைச் செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, புத்தகக் காட்சிக்கான அழைப்பிதழை வழங்கினர்.

தொடக்க விழாவில், 2022-ம் ஆண்டுக்கான 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதுதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

பபாசி புரவலர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்கிறார். செயலர் எஸ்.கே.முருகன் நன்றி கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்