ஆம்னி பேருந்து இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு மறுப்பு: பொங்கலுக்கு 400 பேருந்துகள் சேவை முடங்கும்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆம்னி பேருந்துகள் இயங்காத காலத்துக்கு சாலை வரி விலக்கு அளிக்க போக்குவரத்துத் துறை திடீரென மறுத்துள்ளதால், பொங்கலுக்கு 400 பேருந்துகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு பிறகுநீண்ட நாட்களாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். மேலும் சிலர் அரசிடம் தங்களது உரிமங்களை சரண்டர் செய்துவருகின்றனர். 300 உரிமங்கள் இதுவரை சரண்டர் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகள் இயக்காத காலத்துக்கான சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் விதி உள்ளது. அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சாலை வரியில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்பித்தனர். தற்போது, இந்த விலக்கு அளிக்க முடியாது என போக்குவரத்து துறை திடீரென மறுத்துள்ளது. இதனால், 400 பேருந்துகள் இயங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கவுள்ளதால், போக்குவரத்து துறை எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்