விஜயகாந்துக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன்?

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை, வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே தயாராகிவிட்டது.

படித்தவர்கள், இளைஞர்கள் என அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் திமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிராக செல்வாக்குமிக்க பிரபலங்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தத் தொகுதி யில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து பண்ருட்டி ராமச்சந்திரனும் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும், பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனும் நிறுத்தப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்