வெள்ள பாதிப்பு: மாநகராட்சி சொத்து வரி வருவாய் குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக 2015-16 நிதியாண்டில் மாநகராட்சியின் சொத்து வரி வருவாய் குறைந்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிவாரணப் பணிகளை மட்டுமே மேற்கொண்டதால் சொத்து வரி வசூல் செய்ய முடியவில்லை. பொதுமக்களும் வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர்.

அதனால் கடந்த நிதியாண்டை விட, இந்த நிதியாண்டில் சொத்து வரி வருவாய் சற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் தாமாக முன்வந்து, சொத்து வரியை உடனடியாக ஆன்லைன் மூலமாகவோ, அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ செலுத்தி, மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

15 mins ago

சுற்றுலா

27 mins ago

தமிழகம்

58 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்