நடமாடும் தேநீர் ஊர்திகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.3 கோடி மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான நடமாடும் தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தேயிலைத் தோட்ட நிறுவனம் , சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை சார்பில் சென்னையில் 10 ஊர்திகளும், திருப்பூரில் 3 ஊர்திகளும், ஈரோட்டில் 3 ஊர்திகளும், கோயம்புத்தூரில் 4 ஊர்திகளும் என மொத்தம் 20 தேநீர் ஊர்திகள் செயல்பட உள்ளன. கலப்படமற்ற, தரமான தேநீர் பொதுமக்களுக்குக் கிடைக்க இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

ஜோதிடம்

30 mins ago

க்ரைம்

20 mins ago

இந்தியா

34 mins ago

சுற்றுலா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்