ஊரடங்கு நீட்டிப்பா?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

கேரளா, கர்நாடக மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 674 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,35,389 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,59,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,91,054 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த வாரம் உறுதிப்படுத்தினார். ஒமைக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகள் வரும் நாட்களில் வர உள்ளதால் பொது இடங்களில் கூட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்