வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி கைத்தறித்துறை அலுவலகத்தில் நெசவாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

நெசவாளர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படாததை கண்டித்து காஞ்சிபுரத்தில் கைத் தறித்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு நெசவாளர்கள் சங்கத் தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் தறிகளை இயக்க முடியாமல் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். தறியில் உள்ள பள்ளங்களில் நீர் புகுந்ததில், பாதி நெய்யப்பட்ட பட்டு சேலைகளில் கறை படிந்து விற்பனைக்கு லாயக்கற்றவைகளாக மாறின. இதனால், நெசவாளர்கள் மீள முடியாத துயரத்துக்கு ஆளானார் கள். இதையடுத்து, தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி கைத்தறித் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் நெசவாளர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இந்நிலையில், மாவட்ட நிர் வாகம் வெள்ள நிவாரணம் வழங்க வில்லை என குற்றம்சாட்டி கைத்தறித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நெசவாளர்கள் சங்கத்தினர் நேற்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.

நெசவாளர்களுடன், கைத் தறித்துறை உதவி இயக்குநர் சிவ வடிவேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம், வீடு இடிந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம், நெசவாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன. இதில், 850 நெசவா ளர்களுக்கு மழை நிவாரணம் வழங்கப்படும் என உதவி இயக்கு நர் உறுதி அளித்தார். மற்ற கோரிக் கைகள் தொடர்பாக உயர் அதிகாரி களிடம் ஆலோசித்து பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத் தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, நெசவாளர் முத்து குமார் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களிலேயே 5 ஆயிரம் நெசவாளர் களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்களிடம் பணி செய் யும் நெசவாளர்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

ஆனால், கைத்தறித்துறை 850 பேருக்கு மட்டும் நிவாரணம் வழங் குவதாக கூறியுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்