யாருக்கும் ஆதரவில்லை: தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பல முஸ்லீம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் வெவ்வேறு கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி அதன் மூலம் பொருளாதாரப் பலன்களை அடைகின்றனர். சுயநலனுக்காக எங்கள் அமைப்பு செயல்படாது. எந்த கட்சிக்கும் ஆதரவாக நாங்கள் ஓட்டு கேட்க மாட்டோம். அதேசமயம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். இந்த தேர்தலில் மட்டுமின்றி இனிவரும் எந்த தேர்தலிலும் நாங்கள் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என்ற நிலைப் பாட்டை எடுத்துள்ளோம். முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். பாஜக அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்