30 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் நூலக வரி செலுத்தாமல் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பாக்கி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம்

By ப.முரளிதரன்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகர் பணியிடங்களில் 22 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், 30 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் ரூ.10 லட்சத்துக்கும் மேல் நூலக வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள், 4 ஆயிரத்து 12 கிளை, ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நூலகங் களில் போதிய அடிப்படை வசதி கள் இல்லை. குறிப்பாக, புத்தகங் கள் வைக்க போதிய அலமாரிகள், மக்கள் அமர்ந்து படிக்க மேஜை, நாற்காலிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. நூலகத்துக்கு உள்ளாட் சித் துறைகள் மக்களிடம் வசூலிக் கும் வீட்டு வரியில் 10 சதவீதம் வரி நூலகத்துக்கு கிடைக்கிறது. ஆனால் அவை முறையாக நூலகத் துறைக்கு செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் நூலக துறைக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, நூலகத் துறை யில் உள்ள காலியிடங்கள் குறித்து சமூக ஆர்வலர் தரணிதரன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்கள் குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள நூலகங் களில் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு பொது நூலக இயக்குநருக்கு கடிதம் அனுப்பினேன். இதில் சென்னை, தஞ்சாவூர், தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட நூலக ஆணைக் குழுக் களிடமிருந்து பதில் கிடைக்க வில்லை. மீதியுள்ள 28 மாவட்ட நூலக துறையிடமிருந்து கிடைத்த தகவல்படி, ஆயிரத்து 483 நூலகங் கள் சொந்தக் கட்டிடத்திலும், 235 நூலகங்கள் வாடகைக் கட்டிடத் திலும், 663 நூலகங்கள் இலவச கட்டிடத்திலும் செயல்பட்டு வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 642 புதிய நூலகங்கள் திறக்கப்பட் டுள்ளன. அதேசமயம், கடந்த 10 ஆண்டுகளில் திருநெல்வேலி, நாமக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு புதிய நூலகம் கூட திறக்கப்படவில்லை.

நூலகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் பல ஆண்டு களாக நிரப்பப்படாமல் உள்ளன. 32 மாவட்ட நூலகர் பணியிடங்களில் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நூலகங்களில் பெண்கள்தான் நூலகர்களாக பணிபுரிகின்றனர். ஆனால், நூலகங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். கடந்த 31.12.2015-ன் படி திருப்பூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகள் நூலக ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ரூ.20 கோடியே 51 லட்சம்.

இதேபோல் ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட 30 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் ரூ.10 லட்சத்துக்கும் மேல் நூலக வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன. இதனால், பல மாவட்ட ஆணைக்குழுக்கள் கடந்த 2 ஆண்டுகளாக நூலகங் களுக்கு தேவையான நூல்களை வாங்காமல் உள்ளன.

இவ்வாறு தரணிதரன் கூறினார்.

இதுகுறித்து. அரசு பொது நூல கத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அரசு நூலகங்களில் அடிப்படை வசதிகள் செய்ய பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சிகள், பேரூ ராட்சிகள் வைத்துள்ள நிலுவைத் தொகையும் விரைவாக வசூலிக் கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்