கட்சிகளின் பூத் சிலிப்பை கொண்டு வாக்களிக்க அனுமதிக்க கூடாது: தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகள் அளிக்கும் பூத் சிலிப்பைக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று தலை மைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தி உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்துக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் அளித்த பேட்டி:

திமுக செய்தித் தொடர்பு செய லாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்:

வாக்காளர் அடையாள அட்டை வைத்து மட்டும் வாக்களிக்க அனு மதிக்க வேண்டும். பூத் சிலிப்பைக் கொண்டு வாக்களிக்கும்போது முறைகேடு நடப்பதால் அம் முறையை கைவிட வேண் டும். ஆளுங்கட்சியினரின் அழுத் தம் காரணமாக அதிகாரிகள் அந்த பூத் சிலிப்புகளை அவர்களிடமே கொடுத்துவிட்டுப் போகிறார்கள். இதை அனுமதிக் கக்கூடாது.

ஆளுங்கட்சியின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க வேண்டுமென கேட்டுள்ளோம் என்றார்.

பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன்:

தேர்தல் அறிக்கை எப்படி இருக்க வேண்டும்? என்று உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு தல்களை வழங்கியிருக்கிறது. அதை அப்படியே பின்பற்ற வேண்டும். கட்சியின் தொலைக் காட்சி நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களை கண்காணிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அனுமதி பெற்ற பிறகே கட்சிகள் பூத் சிலிப் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

தேமுதிக இலக்கிய அணி செயலாளர் ரவீந்திரன்:

எங் களுடைய முரசு சின்னத்தைப் போல இருக்கும் சின்னங்களை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தோம். முரசு சின்னம்போல இருக்கும் கூடை மற்றும் கோன் ஐஸ் சின்னத்தை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் எங்களிடம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், அண்மையில் ஒரு கட்சிக்கு கூடை சின்னம் கொடுத்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த்:

தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் வாக்களிக்க முடியாத சூழல் எங்கு இருக் கிறதோ அந்தப் பகுதியிலே வாக்குச்சாவடி அமைத்து, கண் காணிப்பு கேமரா மூலம் கண் காணிப்பதுடன் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். அம்பேத்காரின் 125 பிறந்த நாள் விழா நடத்த அனுமதி மறுக் கப்படுகிறது என்று தெரிவித்தோம். அதற்கு உரிய சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப் பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார் என்றார் ரஜினிகாந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்