இணையதளத்தில் பாஜக விருப்ப மனு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் விருப்ப மனு அளிக்கலாம் என்று பாஜக அறிவித்திருந்தது. 2 தினங்களில் மனுக்களை பெற முடியாது என்பதால் இணையதள வழியில் விருப்ப மனு படிவங்களை பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, http://bjptn.org/pdf/BJP_Assembly_Election_2016_Viruppamanu.pdf என்ற இணைய சுட்டியில், பாஜகவின் விருப்ப மனுவை கட்சியினர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். பெயர், மாவட்டம், கட்சியின் தீவிர உறுப்பினரா, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா, தேர்தலில் எத்தனை முறை போட்டியிட்டுள்ளீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.

அதை பூர்த்தி செய்து மார்ச் 4 மற்றும் 5-ம் தேதி கட்சித் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்ப மனுவை அளிக்க பொதுத் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும், தனித்தொகுதி, பெண்களுக்கு ரூ.2,500-ம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்