தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ரகளை: ரயில்வே பெண் ஊழியர்கள் 9 பேர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடத்தை விதி மீறி நடந்து கொண்ட ரயில்வே பெண் ஊழியர்கள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்ட்ரல் அருகேவுள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இருக்கும் தலைமை வர்த்தக மேலாளரான அஜித் சக்சேனாவின் அறையில் கடந்த 22-ம் தேதி எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சுமார் 15 பெண் டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளே நுழைந்தனர். அனுமதியின்றி நுழைந்த அவர்கள் சக்சேனாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர் களை அறையில் இருந்து வெளி யேற்றினர். எனவே, நடத்தை விதி மீறியதாக கூறி பெண் ஊழியர் கள் 9 பேரும் சஸ்பெண்ட் செய் யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘தலைமை வர்த்தக மேலாளர் அறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பெண் டிக்கெட் பரிசோதகர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. நடத்தை விதி மீறிய அந்த 9 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுசித்ரா பாணி, யோக சித்ரா, ரோஸ்மேரி, நிரூபமா, மஞ்சு, நவநீதம், சகுந்தலா, அனிதா, ஆனிரெஜினா ஆகிய 9 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமை வர்த்தக மேலாளர் அலுவலகத்துக்கு புதியதாக சிசிடிவி கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்