தமிழ் கட்டாயப் பாடம்: பா.ம.க.வின் 17 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப்பெரியாறு விவகாரம் உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

17 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. மக்களவைத் தேர்தலில் பா.ம.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.

2. ஆளுங்கட்சியினரின் தேர்தல் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்து வெற்றிக்கு துணை போன தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம்.

3. மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.

4. பாட்டாளி மக்கள் கட்சியின் 25ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டம் (சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள பாட்டாளி மக்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு 16.07.1989 அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் நடந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சித் தொடங்கப்பட்டது... மக்கள் நலனுக்கான பயணத்தில் வரும் 15.07.2014 அன்று 25 ஆவது ஆண்டை பாட்டாளி மக்கள் கட்சி நிறைவு செய்கிறது. இதையொட்டி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை வரும் 25.07.2014 அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாட பா.ம.க. தலைமைச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.)

5.தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

6.காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.

7. முல்லைப் பெரியாறு - கேரள அரசுக்குக் கண்டனம்.

8. விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

9. மின்வெட்டைப் போக்காத தமிழக அரசுக்கு கண்டனம்.

10. தமிழர் விடுதலை - தமிழக அரசின் இரட்டை நிலைக்குக் கண்டனம்.

11. இலங்கை போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அனுமதி.

12. இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்.

13.தமிழக மீனவர்கள் மீதான சிங்களப்படையின் தாக்குதலுக்கு கண்டனம்.

14. சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசுக்குக் கண்டனம்.

15. அவதூறு வழக்கு மூலமான அரசியல் பழிவாங்கலுக்குக் கண்டனம்.

16.தமிழ் கட்டாயப் பாட சட்டத்தை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

17. கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்