தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாட்கள் கழித்து சென்னை திரும்புங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீட்டரும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (07.11.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, படவட்டமன் தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து கே.ஆர்.எம். பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 334.64 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீட்டரை விட 44 சதவீதம் கூடுதல் ஆகும்.

கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. மீன்வளத் துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (07.11.2021) சென்னையின் பல பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளை செய்து தரவும் முதல்வர் உத்தரவிட்டார். எல்லா இடங்களிலும் உரிய மருத்தவ வசதிகள் கிடைப்பதையும், கோவிட் வழிகாட்டு நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

பின்னர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விபரங்களை கேட்டறிந்தார். கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், கட்டணமில்லா தொலைபேசி 1070 மூலம் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

தற்போது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள

அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

கல்வி

33 mins ago

ஆன்மிகம்

50 mins ago

ஆன்மிகம்

58 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்