வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் யுவராஜ் திமுகவில் இணைந்தார்: விஜயகாந்த் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்த யுவராஜ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

தேமுதிகவின் வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வி.யுவராஜ். இவர், நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

தேமுதிகவில் நீண்டகாலமாக மாவட்டச் செயலாளராக இருந்து வந்த யுவராஜ், விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர். 2009-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் வடசென்னை யிலும், 2014 தேர்தலில் திரு வள்ளூரிலும் போட்டியிட்டுள்ளார். பார்த்தசாரதி, சந்திரகுமார், இளங்கோவன் ஆகிய 2-ம் கட்ட நிர்வாகிகளுக்கு அடுத்தபடியாக விஜயகாந்திடம் நெருக்கமாக பழகி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 150 பேர்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய தேமுதிக செயலாளர் கே.சண் முகம், பாமக ஒன்றிய துணைச் செய லாளர் எம்.பெருமாள் ஆகியோர் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஈஸ்வரி, ஒன்றிய துணைச் செயலாளர் கே.அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கே.அனுசுயா உள்ளிட்ட 150 பேர் நேற்று சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக் கட்சியில் இணைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

வணிகம்

36 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

49 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்