குழந்தைத் திருமணமானாலும் விவாகரத்து கட்டாயம்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

By செய்திப்பிரிவு

குழந்தைத் திருமணம் தானாகவே ரத்து ஆகாது. சம்பந்தப்பட்டவர் களின் வழக்கில் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் மட்டுமே குழந் தைத் திருமணம் செல்லத்தகாத திருமணமாகும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த பெண், விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை நெல்லை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘மனுதாரருக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவருக்கு 1995-ல் திருமணம் நடைபெற்றதாகக் கூறுகிறார். அப்போது அவருக்கு 16 வயதுதான் இருக்கும். 16 வயதில் திருமணம் என்பது குழந்தைத் திருமணமாகும். குழந்தைத் திருமணம் செல்லாது என்பதால், விவாகரத்து என்ற பேச்சு எழவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அப் பெண், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய் தார். அதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

செல்லாத திருமணங்கள்

குழந்தைத் திருமணம் தொடர் பாக கீழ் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள் தவறானது. இந்து திருமணச் சட்டத்தில் செல்லாத திருமணங்கள், செல்லத்தகாது என அறிவிக்க வேண்டிய திரு மணங்கள் குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில், மனைவி உயி ருடன் இருக்கும்போது இன் னொரு பெண்ணை திருமணம் செய்வது செல்லாது. அப்பட்டிய லில் குழந்தைத் திருமணம் இடம் பெறவில்லை.

இந்து திருமணச் சட்டத்தின் ஒரு பிரிவில், 15 வயதில் திருமணம் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட நபர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டு இருக்கும்போது தனது விருப்பத்துக்கு எதிராக திருமணம் நடைபெற்றதாக புகார் அளித்தால் அந்த திருமணம் செல் லாது என நீதிமன்றம் அறிவிக்க லாம் என கூறப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணம் நடை பெற்றால் அந்த திருமணம் தானாகவே செல்லத்தகாத திரு மணமாகாது. சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மேஜராகி 2 ஆண்டு களுக்குள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அப் படிப் பார்த்தால் பெண் 20 வயதுக் குள்ளாகவும், ஆண் 23 வயதுக்குள் ளாகவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் நிலவும் பாகுபாடு களைக் களைய மக்களவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் உத்தர விட்டால் மட்டுமே குழந்தைத் திருமணம் செல்லத்தகாத திரு மணமாகும். எனவே இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்