அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் தேர்வு எப்படி?

By எம்.சரவணன்

விருப்ப மனுக்களை பெற்று, நேர்காணல் நடத்தினாலும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு அளவு கோல்களை வைத்துள்ளன.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெறு வதையும், நேர்காணல் நடத்துவதை யும் ஒரு திருவிழாபோல நடத்து கின்றன. ஆனாலும் வேட்பாளர்கள் தேர்வுக் கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நேர் காணலுக்கு வந்தவர்களே தெரிவிக்கின்றனர்.

வேட்பாளர்கள் தேர்வில் ஜாதி யும், பணபலமும்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் மாநகரங்கள், தனித் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் அங்கு பெரும்பான்மையினராக உள்ள ஜாதியினரையே வேட்பாளர் களாக நிறுத்துகின்றனர். மிக அபூர்வமாகவே மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. சில தொகுதிகளில் மதங்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது. இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சிகள் பொதுத் தொகு திகளில் தலித்களை பெரும்பாலும் நிறுத்துவதில்லை.

இந்தத் தேர்தலைப் பொறுத்த வரை அதிமுகவில் மொத்தம் 26,174 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஜெயலலிதாவுக்காக மட்டும் 7,936 மனுக்கள் குவிந்தன. விருப்ப மனு கட்டணமாக ரூ.28.40 கோடி வசூலானது.

திமுகவில் 5,648 விருப்ப மனுக்கள் வந்துள்ளன. இதன்மூலம் ரூ.12 கோடியே 97 லட்சத்து 77 ஆயிரம் கிடைத்துள்ளது. தேமுதிக, பாமக, காங்கிரஸ், தமாகா, பாஜக ஆகிய கட்சிகளும் விருப்ப மனுக் கள் பெறும் படலத்தை நடத்தி முடித்துள்ளன.

அதிமுகவில் நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. திமுக வில் கடந்த 22-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. காங்கிரஸ், தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் நேர்காணலை முடித் துள்ளன. மார்ச் 14, 15 தேதிகளில் பாஜக நேர்காணலை நடத்துகிறது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு கட்சியினரும் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அதிமுக

அதிமுகவில் 26,174 பேர் மனு அளித்துள்ளதால் நேர்காணல் நடத் துவது சாத்தியமற்றது என்கின்ற னர் அக்கட்சியினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான குடும்பத்தினரும் ஒரு சில அமைச் சர்களும் தங்களுக்கு வேண்டியவர் களை மட்டும் பரிந்துரைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனாலும் ஜெயலலிதாவே இறுதி முடிவு எடுப்பதாக அதிமுகவினர் நம்பு கின்றனர். ஜாதகத்தின் அடிப்படை யில் வேட்பாளர் முடிவு செய்யப் படுவதாகவும் ஒரு தகவல் உண்டு.

திமுக

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தனியார் நிறுவ னங்கள் மூலம் ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் அடிப் படையிலேயே வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கனிமொழி, தயாநிதி மாறன் என குடும்பத்தினருக்காகவும் சில தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுகவினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் மாவட்டச் செயலாளர் களின் பரிந்துரையும் கவனிக்கப்படும் என்கின்றனர்.

தேமுதிக

விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர்தான் வேட் பாளர்களை முடிவு செய்வதாக தேமுதிகவினர் கூறுகின்றனர். விஜய காந்தின் நெருங்கிய வட்டத்தில் உள்ள பார்த்தசாரதி, வி.சி.சந்திர குமார், ஏ.ஆர். இளங்கோவன் ஆகியோர் பரிந்துரைக்கும் நபர் களுக்கும் சில தொகுதிகள் கிடைக்கும் என்கின்றனர்.

பாஜக

பாஜகவில் விருப்ப மனு, நேர்காணல் எல்லாம் தமிழகத்தில் மட்டும்தான். மாவட்டத் தலைவர் களின் பரிந்துரைகளின் அடிப்படை யில் மாநில மையக் குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும். தமிழக பாஜகவில் கோஷ்டி அரசி யல் தலைதூக்கியுள்ளது.

இதனால் டெல்லி வரை வேண்டியவர்களுக்கு வேண்டி யதை கொடுத்து தொகுதிகளைப் பெறும் காங்கிரஸ் கலாச்சாரம் பாஜகவிலும் வந்து விட்டதாக அக்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ்

காங்கிரஸில் இதுவரை கோஷ்டி கள் வாரியாக தொகுதிகள் ஒதுக்கும் கோட்டா முறை இருந்தது. இந்தத் தேர்தலில் கோட்டா முறை இருக்காது என ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதியாக தெரி வித்துள்ளார். ஆனாலும், டெல்லி யில் பார்க்க வேண்டியவர் களை பார்த்து தொகுதிகள் பெறும் கலாச்சாரம் காங்கிரஸில் தொடர்வதாக அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர்.

இடதுசாரி கட்சிகள்

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை போட்டியிடும் தொகுதிகள் முடிவான தும் மாவட்டக் குழுக்களிடம் இருந்து பரிந்துரைகளை பெற்று மாநில செயற்குழுவே வேட்பாளர்களை முடிவு செய்யும். பெரும்பாலும் களப்பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாமக, தமாகா போன்ற கட்சிகளில் கட்சித் தலைமையும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே வேட்பாளர்களை முடிவு செய்வதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஜாதி, பணபலத்துக்கே முதலிடம்

அனைத்துக் கட்சிகளும் மாநகரங்கள், தனித் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் அங்கு பெரும்பான்மையினராக உள்ள ஜாதியினரையே வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

38 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

6 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்