சென்னையில் கட்டப்படும் கட்டிடங்களின் வரைபட அங்கீகாரத்தை வெப்சைட்டில் தெளிவாக பிரசுரிக்க வேண்டும்: மாநகராட்சி, சிஎம்டிஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னையில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களின் வரைபட அங்கீகாரத்தையும் இனி மாநகராட்சியின் வெப்சைட்டில் தெளிவாக பிரசுரிக்க வேண்டும் என மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ-வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் மதன் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், ‘‘சேத்துப் பட்டு ஹாரிங்டன் ரோடு 2-வது அவென்யூ குடியிருப்புப் பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தைச் சுற்றிலும் முறையாக விடவேண்டிய இடைவெளி விடவில்லை. திட்ட அனுமதியை மீறி கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அதை மூடி சீல் வைக்க வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிமுறை மீறலே நடக்கவில்லை என மாநகராட்சி 9-வது மண்டல அதிகாரி அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதையடுத்து உண்மையை மறைத்து அறிக்கை தாக்கல் செய்த அந்த அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து 3 நாட்களுக்குள் அவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி அவர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: இந்த நீதிமன்றத்தை திசை திருப்பும் வகையில், உண்மையை மறைத்து அறிக்கை சமர்ப்பித்த அதிகாரியை எச்சரிக்கிறோம். இது தொடர்பாக அவரது பணிநடத்தை குறிப்பிலும் குறிப்பிட உத்தரவிடுகிறோம்.

இந்த மனுவில் கடந்த மார்ச் 8-ம் தேதி, இந்த கட்டுமானம் குறித்த அங்கீகார வரைபடத்தை மாநகராட்சி வெப்சைட்டில் வெளி யிட உத்தரவிட்டோம். இந்த உத்த ரவை சென்னை மாநகராட்சியில் கட்டப்படும் அனைத்து கட்டிடங் களுக்கும் ஏன் அமல்படுத்தக் கூடாது? எனவே இனி சென்னை யில் கட்டப்படும் அனைத்து கட்டிடங் களின் வரைபட அங்கீகாரமும் மாநகராட்சியின் வெப்சைட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கட்டிடத்தை கட்டுபவர் என்ன மாதிரியான கட்டிடம் கட்டப்போகி றோம் என்பதை முன்கூட்டியே அதில் பிரசுரிக்க வேண்டும். மாநக ராட்சியும், சிஎம்டிஏ நிர்வாகமும் அந்த வரைபடம் எல்லோரும் நன்றாகப் பார்க்கும் வகையில் உள் ளதா? இல்லை கண்துடைப்புக்காக போடப்பட்டுள்ளதா? என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக உள்ள சட்டதிட்டங்களை பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு கொள்ளும் வகையில் அடிக்கடி விளம்பரப்படுத்த வேண்டும்” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்